அரசுப் பள்ளி ஆசிரியர் கொலை: மேலும் 3 பேர் கைது

by Staff / 14-06-2024 01:21:27pm
அரசுப் பள்ளி ஆசிரியர் கொலை: மேலும் 3 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி செட்டியார் பஜாரைச் சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் கே.பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். பள்ளிக்கு திங்கள்கிழமை (ஜூன்10) காலை தனது டூவீலரில் சென்ற அவரை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது. கமுதி போலீசார் இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனை (22) கைது செய்து விசாரித்து வந்தனர்.விசாரனையில் அடிப்படையில் கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து அரியப்பனுக்கும், ஆசிரியர் கண்ணனுக்கும் வட்டிக்கு கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த முன்பகை காரணமாக முத்துஅரியப்பனின் தம்பி முருகன் ((30), முத்தாலங்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் (25) ஆகிய இருவரும் ஆசிரியர் கண்ணனை கொலை செய்தனர். கொலை செய்த நபர்களுக்கு ஆசிரியர் வாகனத்தில் புறப்பட்டு வரும் வழித்தடம் குறித்த தகவலை நான் கைப்பேசியில் தெரிவித்தேன் என பாலமுருகன் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில் கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்த முத்துரமாலிங்கம் மகன் முத்துஅரியப்பன்(41), இவரது தம்பி முருகன்(30), முத்தாலங்குளத்தைச் சேர்ந்த சக்கரை மகன் வினோத்குமார்(23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via