மக்கள் வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும்

by Staff / 14-06-2024 01:18:54pm
மக்கள் வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும்

மக்கள் வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும். கட்சியோ, சின்னத்தையோ பார்த்து வாக்களிக்க கூடாது என இயக்குநர் தங்கர்பச்சான் பேட்டி அளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தனக்கு வாக்களித்த கடலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தங்கர்பச்சான், "தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று மக்களுக்காக செய்தது என்ன? பாமகவிற்கு கிடைத்த சிறிய அதிகாரங்கள் மக்கள் நலனுக்காக பயன்படுத்தியுள்ளது. வென்றாலும், தோற்றாலும் மக்கள் உடன் இருப்பேன். மக்களை சார்ந்தே என்னுடைய நடவடிக்கைகள் இருக்கும்” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories