கூட்டு பாலியல் வன்கொடுமை 3 இளைஞர்கள் கைது

by Staff / 06-10-2022 02:47:55pm
கூட்டு பாலியல் வன்கொடுமை 3 இளைஞர்கள் கைது

ஜார்கண்ட் மாநிலத்தில் சிம்தேக்கா மாவட்டத்தில் கோலேபிரா என்கிற பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் 16 வயது சிறுமி படித்து வந்துள்ளார் . பழங்குடியின இனத்தை சேர்ந்த அந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலியால் துடித்திருக்கிறார். உடனே பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்து பார்த்தபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியிடம் நடத்திய விசாரணையில் மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆகாஷ் டெட், ரோஹித் குலு , அமன் டுங்டுங் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo