ஆன்லைன் ரம்மியால் உயிரைவிட்ட வாலிபர்

திருச்சி மணப்பாறையை சேர்ந்த இளைஞர் சந்தோஷ். 23 வயதாக இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகியதாக தெரிகிறது. இந்த விளையாட்டின் மூலம் அதிகளவில் பணத்தையும் இழந்துள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த சந்தோஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தான் தற்கொலை செய்துக் கொள்ள முடிவு எடுத்தததை அடுத்து, சந்தோஷ் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், " என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்
Tags :