50-வது திருமண நாளையொட்டிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இன்று நடந்த இந்த சந்திப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 50-வது திருமண நாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் கமல்ஹாசன், செல்வப்பெருந்தகை, திருமாவளவன், காதர் மொய்தீன், வைகோ, முத்தரசன், ஈஸ்வரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags : 50-வது திருமண நாளையொட்டிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து