ரயில்வே ஒப்பந்த பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். சென்னையில் ரயில்வே ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் 18ந்தேதி (18.10.24) இவரது மனைவி வெளியே சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து பார்க்க போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 16 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து சுந்தர் மனைவி அருள் சாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கூசாலிபட்டி மேட்டு தெருவை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது மகன் வானு பாபு என்ற பாபு (34), திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது
மேலும் வானுபாபு திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக களக்காடு கக்கன் நகர் மேல தெருவை சேர்ந்த இந்திரா (49), அதே பகுதியில் வசித்து வரும் சேரன்மாதேவியை சேர்ந்த சுரேந்தர் மனைவி சகிதா ஆகியோரையும் போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
Tags : கோவில்பட்டியில் ரயில்வே ஒப்பந்த பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது