கடலூர் அருகே, கடலில் படகு கவிழ்ந்ததால் தத்தளிக்கும் 6 மீனவர்களை மீட்பதில் தொடரும் சிக்கல்.
கடலூர் அருகே தைக்கால் தோணித்துறையை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சித்திரைப் பேட்டை அருகே கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள் மற்றொரு படகு மூலம் மீட்கப்பட்டு விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள தொழிற்சாலையின் கப்பல் இறங்கு தளத்தில் தங்கியுள்ளனர்.ஆனால் மீட்கப்பட்ட படகும் சேதமடைந்ததால், 2 படகிலும் சென்ற 6 மீனவர்கள் 2 நாட்களாக நடுக்கடலில் தவித்து வருவதாகவும், படகு கவிழ்ந்ததால் தத்தளிக்கும் 6 மீனவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், உள்ளே சென்று மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தைக்கால் தோணித்துறை பகுதிக்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
Tags : கடலூர் அருகே, கடலில் படகு கவிழ்ந்ததால் தத்தளிக்கும் 6 மீனவர்களை மீட்பதில் தொடரும் சிக்கல்



















