திமுக செயற்குழு கூட்டம் திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் தலைமையின் நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம் திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் தலைமையின் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மாவட்ட செயலாளர் பதவியில் நீடிக்க முடியும் என்றும் வயது வரம்பு 70 ஆக நியமிக்கப்பட்டுள்ளது ஒன்றிய மற்றும் நகரச் செயலாளர்கள் அதிகபட்சமாக வயது 60 என்றும் பேரூர் வட்ட மற்றும் மாநகராட்சி வட்டச் செயலாளர்கள் அதிகபட்ச வயது 50 கிளைச் செயலாளர் வயது 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது திமுக வின் கட்சி மாவட்ட எண்ணிக்கை 78 இல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று வீதத்தில் கட்சி பணிகள் பிரிக்கப்பட உள்ளன கட்சியில் இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இளைய வயதினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் ஒரே நபர் நீண்ட காலம் ஒரு பதவியில் நீடிப்பதை தவிர்க்கதற்காகவும் திமுகவில் இந்த மாற்றங்கள் நிகழ்த்தப்பட உள்ளன.
Tags :


















