பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் . - அதிரடி உத்தரவு

போக்குவரத்துத்தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்க்க , ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியின் போது பயணிகளிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். பேருந்தின் பழுதுகளை சரி செய்து, சரியான நேரப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்த்டத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட சரியான பயண கட்டணங்களை, பயணிகளிடம் உரிய பயணச் சீட்டு அளித்து வசூலிக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
Tags :