ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை டிஜிபி சைலேந்திர பாபு

by Staff / 16-11-2022 12:00:43pm
ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை  டிஜிபி சைலேந்திர பாபு

வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக வளாகத்தில் ஓட வைத்து, ராக்கிங் செய்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கொள்காட்டி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட எஸ்.பிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ராக்கிங் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாமதிக்காமல் விரைவாக முடிக்க வேண்டும் எனவும், ராகிங் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க, அது தொடர்பான புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo