போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை.ரூபாய் 1000 அபராதம்
திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி, கீழத் தெருவை சேர்ந்த மாணிக்கம் (65) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் கடந்த 2020 -ம் ஆண்டு தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு எதிரி மாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்து எதிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி. அன்புசெல்வி, அவர்கள் போக்சோ வழக்கின் எதிரியான மாணிக்கத்திற்கு 5 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி எதிரிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சீவலப்பேரி காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.Tags :