திமுக, அதிமுகவுக்கு தான் போட்டி. முன்னாள் அமைச்சர் பேட்டி..அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளியா.

by Staff / 23-03-2024 04:53:23pm
திமுக, அதிமுகவுக்கு தான் போட்டி. முன்னாள் அமைச்சர் பேட்டி..அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளியா.

சென்னையிலிருந்து இன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையம் வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.மோடி எங்கள் டாடி என கூறினீர்கள் இப்போது நிலை என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு.?அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி விருதுநகரில் அதிமுக கூட்டணி வேட்பாளரும் திமுக கூட்டணி வேட்பாளர் போட்டியிடுகிறார். விருதுநகரில் விஜயகாந்துக்கு நல்ல மரியாதை, செல்வாக்கு உள்ளது.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் டெல்லி முதலமைச்சர் அமலாக்கத்துறையால் கைது குறித்த கேள்விக்கு.?
தேர்தல் நேரத்தில் கொலை நடந்தால் குற்றவாளியை கைது செய்யக்கூடாதா.? நீதிமன்றம் தான் கூற வேண்டும்.

அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடத்தப்படும் விசாரணை சரிதானா.? எனக் கேட்டதற்கு.அரவிந்த் கெஜ்ரிவால் கைது சரிதான் என கூறவில்லையே. நீதிமன்றம் தான் முடிவெடுக்கும். , விஜய் பாஸ்கர் வீட்டில் எதுவும் இல்லை என அவரது தந்தை கூறியிருக்கிறார்.அவர்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளியா. என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்

 

Tags :

Share via