கொதிக்கும் எண்ணையை ஊற்றி தொழிலாளி தற்கொலை முயற்சி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே நேற்று பகல் 12 மணியளவில் 55 வயது மதிக்க நபர் ஒருவர், சாலையோரம் அமர்ந்திருந்தார். கூர்மையான கற்கள்அவர் அங்கிருந்த கூர்மையான கற்களை எடுத்து தனது கை, கால்களை குத்தி கிழித்துக் கொண்டார்.இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள், அந்த நபரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காயங்களுக்கு மருந்து போட்டு, அவரை மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்தனர். சாக்கடையில் குதித்தார்இதனிடையே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அந்த நபர், அரசு மருத்துவமனை அருகே உள்ள சாக்கடையில் குதித்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதனால அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்று விட்டார். இரவு சுமார் 9 மணியளவில் பரமத்திவேலூர் பஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார். கொதிக்கும் எண்ணெய் அங்கு சில்லி சிக்கன் போடுவதற்காக அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை திடீரென எடுத்து தன் தலையில் ஊற்றிக் கொண்டார். யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் இருந்தவர்கள் தெரித்து ஓடினார்கள். கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக்கொண்டதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு அருகாமையில் உள்ள பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனநலம் பாதிப்பு இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர், திருச்செங்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன் (வயது 55) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறது. அவர் குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கடையின் வெளிப்பகுதியில் இதுபோன்று அடுப்பு வைத்து சமையல் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags :