OYO அறையில் காதல் ஜோடி தற்கொலை

டெல்லியில் உள்ள மவுஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் OYO அறையில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர். அறையில் உள்ள கட்டிலில் இளம்பெண் மற்றும் இளைஞர் பிணமாக கிடந்தார். இவர்கள் காதலை வீட்டில் ஏற்காததால் தற்கொலை செய்து கொண்டதாக தற்கொலை கடிதத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முழு விவரம் இன்னும் தெரியவில்லை.
Tags :