பெண்ணை சுட்டுக்கொன்ற தந்தை, மகன்

by Staff / 30-04-2023 01:43:12pm
பெண்ணை சுட்டுக்கொன்ற தந்தை, மகன்

மகாராஷ்டிரா: மும்பையில் மண்டலாவில் உள்ள மன்குர்த் இந்திரா நகரில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நேற்று மாலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மோதலாக மாறியதால், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், மகனும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த பர்ஸானாவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மார்பில் குண்டு பாய்ந்ததில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo