காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட்

by Staff / 28-02-2025 03:00:12pm
காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு வாரண்ட்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷுக்கு எதிராக வேறொரு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை தாக்கியதாக, பிரவீன் ராஜேஷுக்கு எதிராக தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கில் வரும் 3-ம் தேதி பிரவீன் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via