மயிலாடுதுறை திருப்பறியலூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
உலகத்தில் தீயவைகள் அகல வேண்டுமென்றால் எதிர்மறையான சொற்களையோ எண்ணங்களையோ விட்டொழிக்க வேண்டும். நல்ல சொற்களை நம்பிக்கையான சொற்களைக் கூறும்போது அது கேட்பவருக்கும் சொல்பவருக்கும் நன்மை பயக்கும் வலிமையுடைய சொற்களே மந்திரம் எனப்படும். நம்முடைய சொற்கள் இனிமையான சொற்களாக இருந்தாலே அது பிறருக்கும் நமக்கும் வலிமையான வாழ்வினை பெற்றுத்தரும். எனவே நல்ல வெற்றிகளும் வாழ்க்கையும் நம்மைத் தேடிவர வேண்டுமெனில் நல்ல சொற்களை சொல்லுதல் அவசியமாகும்.
முன்பொரு காலத்தில் தட்சனின் மகளான தாட்சாயணியை திருமணம் செய்தார் சிவபெருமான். சிவபெருமான் தனது மருமகனான அகந்தை கொண்ட தட்சன் கைலாயத்தில் சிவனை தரிசிக்க வருபவர்கள் நந்திதேவரின் அனுமதி பெற வேண்டும் என்ற விதிக்குக் கட்டுப்படாமல் ஒருமுறை நந்திதேவரின் அனுமதி பெறாமல் வந்தார். இதை அறிந்த சிவன் விதியை மீறிய மருமகனை வரவேற்க விரும்பவில்லை. அதனால் சிவபெருமானுக்குத் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு யாகம் ஒன்றை நடத்தினார் தட்சன். அந்த யாகத்திற்கு தடுக்க வீரபத்திரரை அனுப்பி தட்சன் வகித்த பிரஜாபதி என்ற பதவி பறித்தார் சிவன்பெருமான். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் பதவியை இழக்க நேரிடும் என்பதை இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். இந்த வரலாறு நிகழ்ந்த இடம் தான் கீழப்பரசலூர் திருப்பறியலூர். இங்குள்ள சிவன் வீரச்செயல் நடத்தியதால் வீரட்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தவற்றை உணர்ந்த தட்சன் இங்கு சரண் அடைந்ததால் சுவாமிக்கு அசல ஈசுவரர் என்ற பெயரும் உண்டு. அம்மனின் பெயர் பாலாம்பிகா, நவக்கிரகங்களில் சூரியனுக்கு சன்னதி உண்டு. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு சுவாமி வீதி உலாவும் கிரக தோஷம் போக்கும் பூஜை நடைபெறுகிறது.
தவறு செய்பவர் யார் விட்டாலும் அதற்கான தண்டனையும் நிச்சயம் தருவார் வீரட்டேஸ்வரர் என்பதில் இந்த இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.
இந்தத் தலம் வீரத் தலமென்பதால் இங்கு வந்து இந்த சிவபெருமானை வணங்கினால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பதும் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பதும் ,நேர்மறை எண்ணங்கள் மட்டுமே ஏற்படும் என்பதும் ஐதீகம்.
முக்கிய திருவிழாக்கள் தமிழ்வருடப்பிறப்பு ஆடிப்பிறப்பு ஐஎஃப்எஸ்சி சிறப்பு புரட்டாசி சதுர்த்தி தை முதல் தேதி வைகாசி திருவோணம் ஆறுமுறை அபிஷேகம் செய்யப்படுகிறது கார்த்திகை மாதம் கடைசி நாளில் சிவன் வீதி உலா வருவது சிறப்பான ஒன்றாகும் இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது 104 வது தேவாரத்தலம் ஆகும். சமீபத்தில் திருப்பணி செய்து மிக அழகாக இந்த திருத்தலம் காட்சி தருகிறது உள் பிரகாரத்தில் விநாயகர் ,விசுவநாதர் ,பைரவர் ,சூரியன் சன்னதிகள் உள்ளன . துர்க்கை , பிரம்மா ,தட்சிணாமூர்த்தி , சுப்பிரமணியர் ஆகியோர் கோஷ்ட மூர்த்தங்களாக உள்ளனர். இங்கு கொடிமரம் இல்லை. இறைவனுக்கு தினமும் தயிர் சாதம், சித்தன்னம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
Tags :