விவசாயிகளை சிறையில் அடைத்தது கொடுங்கோன்மையின் உச்சம்- சீமான்

by Staff / 17-11-2023 05:12:44pm
விவசாயிகளை சிறையில் அடைத்தது கொடுங்கோன்மையின் உச்சம்- சீமான்

திமுக அரசு வேளாண் பெருங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 3174 ஏக்கர் வேளாண் விளை நிலங்களை தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாக தொழில் வளாகம் அமைப்பதற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 150 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வந்த விவசாயிகளை திமுக அரசு எதேச்சதிகாரப்போக்குடன் கைது செய்து சிறையிலடைத்தது.
 

 

Tags :

Share via

More stories

Logo