ஏப்ரல் 1 முதல் பேருந்துகள் சரக்கு வாகனங்களுக்கு தனிப்பாதை

by Staff / 24-03-2022 03:10:24pm
ஏப்ரல் 1 முதல் பேருந்துகள் சரக்கு வாகனங்களுக்கு தனிப்பாதை

டெல்லியில் ஏப்ரல் 1 முதல் பேருந்துகள் சரக்கு வாகனங்கள் என தனி பாதை பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில் விதிமுறைகளை மிறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரித்து  உள்ளது.

போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தியில் பயணிகள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பேருந்துகளுக்கு 15 தடங்களில் தனி பாதையை நடைமுறைபடுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தப் பாதைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பேருந்துகளும் சரக்கு வாகனங்களும் மட்டுமே செல்லலாம் என்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மற்ற வாகனங்களும் செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தனிப்பாதை பேருந்துகளுக்கு சரக்கு வாகனங்களும் 24 மணி நேரமும் செல்லலாம் என குறிப்பிட்டுள்ளது விதிமுறைகளை மிறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via