மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் 20 தேநீர் வாகனக்கடைகள் ..முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

by Editor / 15-12-2021 02:39:18pm
மக்கள் கூடும் இடங்களில்  நடமாடும் 20 தேநீர் வாகனக்கடைகள்  ..முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தேயிலைத் தோட்ட நிறுவனம் சார்பில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக நடமாடும் தேநீர் ஊர்திகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 20 நடமாடும் இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று காலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை சார்பில் சென்னையில் 10  வாகனங்கள்,கோவையில் 4வாகனங்கள், திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா 3 வாகனங்கள் என மொத்தம் 20 தேநீர் வாகனங்கள் முதல்கட்டமாக செயல்பட உள்ளன. தரமான தேநீர் பொதுமக்களுக்குக் கிடைக்க இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், அரசு கட்டிடங்களில் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டீ விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது

மக்கள் கூடும் இடங்களில்  நடமாடும் 20 தேநீர் வாகனக்கடைகள்  ..முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
 

Tags :

Share via