ஐ.நா அமைதிப்படை வீரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு- இந்தியா கவலை

by Admin / 12-10-2024 01:46:07pm
ஐ.நா அமைதிப்படை வீரர்கள்  மீது  இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு-  இந்தியா கவலை

இந்தியா உள்பட ஐம்பது நாடுகளை சேர்ந்த ஐநா அமைதிப்படை வீரர்கள் லெபனானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மூன்று முறை இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.. இதற்கு இந்தியா  வருத்தம் தெரிவித்துள்ளது. இந்திய வீரர்களுக்கு எந்த விதமான காயங்கள் இல்லாமல் இருப்பினும், அமெரிக்கா உள்பட ஐநாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் வீரர்கள் அணிந்திருக்கும் நீல நிற ஹெல்மெட்டுக்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வருவதாகவும் இது ஐநா அமைதி காக்கும் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்யப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது..

தெற்கு லெபனானி ஐநா அமைதி காக்கும் படையினரால் பயன்படுத்தப்பட்ட கண்காணிப்பு கோபுரத்தின் மீது இஸ்ரேல்  படைகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் காயமடைந்தனர் .ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அமைதி காக்கும் படையினர் மீது  துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். ஐநா அமைதி காக்கும் படையினர் தங்கி இருந்த பதுங்கு குழி நுழைவாயிலை தாக்கியும் வாகனங்கள் மற்றும் தகவல் தொடர்பு கருவிகளை சேதப்படுத்தியதாகவும் ஆளில்லா விமானம் அமைதிப்படை தங்கி இருக்கும் நுழைவாயில் வரை பறப்பதையும் காண முடிகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை இஸ்ரேல் வீரர்கள் வேண்டுமென்றே துப்பாக்கி சூடு நடத்தி அமைதிப்படையின் கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்க செய்ததோடு ராஸ் நகோராவில் யு. என். பி. ஒன். 32ஏ மீதும் வேண்டுமென்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த மோதல் நடப்பதற்கு முன்பு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.. இருப்பினும் மின்விளக்குகள் மற்றும் ஒளிபரப்பு கூடாரத்தையும் சேதப்படுத்தியது.. அனைத்து போரிடும் தரப்பும் ஐ.நா பணியாளர்கள் மற்றும் சொத்துக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய கடமைப்பட்டு உள்ளனர்.இஸ்ரேல் 1978-ல் ஐ.நா பாதுகாப்பிலிருந்து வெளியேறிய பின்பு தெற்கு லெபனானில் அவர்கள் உள்ளனர். இருவருக்கும் இடையான நீலக்கோட்டில் அடுத்தடுத்து மோதல்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சில் இரண்டு முறை மாற்றம் செய்தது.

 

 

Tags :

Share via