ஈரானோடு வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

by Admin / 13-01-2026 10:16:32am
ஈரானோடு வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானில் உள்நாட்டு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால், ஈரானோடு வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது. ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கும் அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்கும் அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த வரி விதிப்பால் ஈரானுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் கடும் சவால்களை எதிர்கொள்ள கூடிய சூழல் உருவாகும். எரிசக்தி மற்றும் உற்பத்தி துறைகள் அதிகம் பாதிக்கப்படலாம். அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதால் உலகளாவிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை மற்றும் பங்குச்சந்தைகளின் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via