ஓசூரில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற டீசல் திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவலர்

by Admin / 14-03-2022 03:32:27pm
ஓசூரில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற டீசல் திருட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவலர்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற டீசல் திருட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிபட்டார்.

ஓசூர் அருகே கர்நாடக எல்லையான ஜிகினி  நகரத்தில் இரவு நேரத்தில் சரக்கு லாரிகளில் இருந்து அடிக்கடி டீசல் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு கும்பல் டீசல் திருட்டில் ஈடுபட்டு கொண்டு இருப்பது தெரியவந்தது.

அவர்களை பிடிக்க முயன்ற போது நடைபெற்ற தாக்குதலில் போலீசார் ஒருவர் காயம் அடைந்தனர் இதனை அடுத்து ஆய்வாளர் சுதர்சன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரின் காலில் சுட்டு பிடித்தனர். 

 

Tags :

Share via