ரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் பெட்டி இணைப்பு

by Editor / 15-04-2022 09:58:46pm
 ரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் பெட்டி  இணைப்பு

தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் ரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்கின்றனர் இவர்களின் வசதிக்காக பல்வேறு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 15 அன்று நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு ரயிலில் (22667) 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டியும், திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் (16106) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை டுரண்டோ விரைவு ரயிலில் (20602) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், ஏப்ரல் 15 மற்றும் 18 முதல் 20 வரை ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலில் (22662) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், ஏப்ரல் 17 அன்று தாம்பரம்-நாகர்கோவில்  விரைவு ரயிலிலும் (22657), ஏப்ரல் 18 அன்று நாகர்கோவில் - தாம்பரம்   ரயிலிலும் (22658) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 17 அன்று மதுரை - டாக்டர் எம்ஜிஆர்  சென்னை சென்ட்ரல்  டுரண்டோ ரயிலில் (20601) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படடவுள்ளது. ஏப்ரல் 20 வரை சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் (16723), சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் (22661), தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் சென்னை - ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் (16851/16852), சென்னை -  குருவாயூர் விரைவு ரயில் ஆகியவற்றில் (16127) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. ஏப்ரல் 21 வரை திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் (16724),  மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344), குருவாயூர் - சென்னை விரைவு ரயில் (16128) ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

 

Tags :

Share via