குற்றச்செயல்களை தடுக்க அனைத்து விடுதிகளிலும் கண்காணிப்பு கேமிராக்களை நிறுவிட தென்காசி டி.எஸ்.பி. அறிவுறுத்தல்.

by Editor / 01-06-2023 10:24:00pm
குற்றச்செயல்களை தடுக்க அனைத்து விடுதிகளிலும் கண்காணிப்பு கேமிராக்களை நிறுவிட தென்காசி டி.எஸ்.பி. அறிவுறுத்தல்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுத்தோறும் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் தென்மேற்குப்பருவமழைக்காலம் சீசன் காலமாகும்.இந்த நாட்களில் குற்றால அருவிகளில் நீராடிட சுமார் 50 முதல் 80 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்வந்துசெல்வது வழக்கமாக இருந்துவருகிறது.இந்தநிலையில் இந்த வாரம் தென்மேற்குப்பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.மேலும் கேரளாவில் ஜூன் முதல்வாரம் தென்மேற்குப்பருவமழை தொடங்குமென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளநிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன.இதன் தொடர்ச்சியாக இங்கு முறையாக அனுமதிபெற்று 50க்கும் மேற்ப்பட்ட விடுதிகளும் அனுமதிபெறாமல் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் விடுதிகளாகவும்,செயல் பட்டுவருகின்றன.இங்குள்ள அனுமதி பெற்ற விடுதிகளிலும் ,அனுமதிபெறாத விடுதிகளிலும் தங்கும் சுற்றுலாப்பயணிகள் சிலர் குடும்ப பிரச்சனைகள் காரணமாக விஷமருந்தி தற்கொலைசெய்துகொள்ளும் சிலாசம்பாவிதசம்பவங்களும் நடந்துவிடுவதால் முகவரிகளை அறிவதற்கு மிகுந்த சிரமத்திற்கு காவல்துறையினர் தள்ளப்படுவதால் குற்றாலம் விடுதி கேளிக்கை விடுதிகளில் சரியான முகவரி மற்றும் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே சுற்றுலாவாசிகளுக்கு விடுதிகளில் தங்க அனுமதிக்க வேண்டும்.மேலும் அனைத்து விடுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பழுது நீக்கி பயண்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என விடுதி அதிபர்களுக்கு தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். இன்று தென்காசி குற்றாலம் பகுதிகளில் உள்ள விடுதிகளின் மேலாளர் மற்றும் விடுதி அதிபர்களை அழைத்து இதனை தெரிவித்தார்.

 

Tags :

Share via