விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகினாா்,கமல்ஹாசன்.

by Admin / 07-08-2024 12:01:22am
 விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகினாா்,கமல்ஹாசன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகரும் மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமலஹாசன் தன்னுடைய சினிமா பயணத்தில் மூன்று ஆண்டுகள் பல்வேறு பட வேலைகளின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த ஆண்டிலிருந்து தொகுத்து வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நான் சென்று இருக்கிறேன். அவர்களுடைய அன்பை பெற்று இருக்கிறேன். இந்த நிகழ்வு மூலமாக பல்வேறு விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் அதன் காரணமாக  இந்த தொலைக்காட்சிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அத்தனை பேரையும் இந்த நேரத்தில் நினைவு கூறுவதாகவும் வரும் நிகழ்ச்சியும் சிறப்பாக அமையும் என்றும் தன் கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்..

 விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகினாா்,கமல்ஹாசன்.
 

Tags :

Share via

More stories

Logo