நெல்லை துப்பாக்கிசூடு விவகாரம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,பரபரப்பு கண்டனம்

by Editor / 29-07-2025 02:48:52pm
நெல்லை துப்பாக்கிசூடு விவகாரம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,பரபரப்பு கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில், தகராறில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை தட்டிக் கேட்ட SI மீது தாக்குதல் நடத்தியதால், 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த விஷயம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற திமுக ஆட்சியை அகற்றுவதே, தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி!" என X பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via