தமிழ்நாட்டில்  69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தகவல்.

by Editor / 20-04-2024 09:35:58am
தமிழ்நாட்டில்  69.46% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தகவல்.

 இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு 19 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்றுவாக்குப்பதிவு நடைபெற்றது.

 தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும்  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு 7 மணிவரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இறுதியாக வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 72.09% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி தொகுதி வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் :

1. திருவள்ளூர்                      – 68.31%
2. வட சென்னை                  – 60.13%
3. தென் சென்னை             – 54.27%
4. மத்திய சென்னை          – 53.91%
5. ஸ்ரீபெரும்புதூர்                – 60.21%
6. காஞ்சிபுரம்                       – 71.55%
7. அரக்கோணம்                  – 74.08%
8. வேலூர்                                – 73.42%
9. கிருஷ்ணகிரி                   – 71.31%
10. தருமபுரி                           – 81.48%
11. திருவண்ணாமலை    – 73.88%
12. ஆரணி                              – 75.65%
13. விழுப்புரம்                      – 76.47%
14. கள்ளக்குறிச்சி              – 79.25%
15. சேலம்                               – 78.13%
16. நாமக்கல்                        – 78.16%
17. ஈரோடு                             – 70.54%
18. திருப்பூர்                          – 70.58%
19. நீலகிரி                             – 70.93%
20. கோயம்புத்தூர்            – 64.81%
21. பொள்ளாச்சி                 – 70.70%
22. திண்டுக்கல்                  – 70.99%
23. கரூர்                                  – 78.61%
24. திருச்சிராப்பள்ளி       – 67.45%
25. பெரம்பலூர்                   – 77.37%
26. கடலூர்                             – 72.28%
27. சிதம்பரம்                       – 75.32%
28. மயிலாடுதுறை            – 70.06%
29. நாகப்பட்டினம்            – 71.55%
30. தஞ்சாவூர்                       – 68.18%
31. சிவகங்கை                    – 63.94%
32. மதுரை                            – 61.92%
33. தேனி                                – 69.87%
34. விருதுநகர்                     – 70.17%
35. ராமநாதபுரம்               – 68.18%
36. தூத்துக்குடி                   – 59.96%
37. தென்காசி                     – 67.55%
38. திருநெல்வேலி            – 64.10%
39. கன்னியாகுமரி          – 65.46%

மொத்தம்                              – 69.46%


 

 

Tags : மக்களவைத் தேர்தலில்  69.46% வாக்குகள்

Share via