நீலகிரி,கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 08-12-2023 07:12:35am
 நீலகிரி,கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில்   கனமழை பெய்ய வாய்ப்பு.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : நீலகிரி,கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.

Share via

More stories