தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கனமழை பெய்யும் மாவட்டங்களாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் கடலில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் ஜூன் 30-ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளதோடு சென்னையில் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags :



















