ஆப்பிரிக்கா தீவு நாடான செஷல்ஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 28-06-2026 12:27:22am
ஆப்பிரிக்கா தீவு நாடான செஷல்ஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான செஷல்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையின் போது அதிபர் பேட்டரி ஹெர்மினி மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று ராணுவ அணி வகுப்பு மரியாதை அளித்தனர். தலைநகர் விக்டோரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் தேசிய கொடியை அசைத்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். செசல்ஸ் நாட்டின் தேசியத் தினப்பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வின் போது செஷல்ஸ் நாட்டு அதிபருடன் தேசிய தாவரவியல் பூங்காவிற்கு சென்று மரக்கன்றுகளை நடும் விழாவிலும் கலந்து கொண்டார். அத்துடன் 150 ஆண்டுகள் வயதுடைய ஆமையையும் பார்வையிட்டார்.

ஆப்பிரிக்கா தீவு நாடான செஷல்ஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி
 

Tags :

Share via

More stories

Logo