பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பேர் ரயில் மோதி பலி

by Staff / 12-04-2022 04:35:57pm
பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பேர் ரயில் மோதி பலி

ஆந்திரா மாநிலம் ஷீ காகுளம்  அருகே பழுதாகி நின்ற ரயிலிலிருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது எதிர்த்திசையில் வந்த மற்றொரு ரயில் மோதியதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். செகந்திராபாத்தில்  இருந்து காவுகத்திக் நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயிலில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது .இருந்த பயணிகள் சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து கீழே இறங்கி  கவனக்குறைவாக மற்றொரு தண்டவாளத்தில் நின்று இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர் திசையில் வந்த கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மீது மோதியதில் பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories