கிணற்றில் தத்தளித்த பன்றி மீட்பு

by Staff / 03-05-2023 04:49:51pm
கிணற்றில் தத்தளித்த பன்றி மீட்பு

அந்தியூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்தில் கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி உயிருடன் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மலைக் கருப்புசாமி கோயில் வனப்பகுதி ஒட்டியுள்ள, சுந்தர் என்பவரது தோட்டத்து கிணற்றில் காட்டுப்பன்றி ஒன்று தவறி விழுந்தது. நேற்று தோட்டத்திற்கு கிணற்றை ஏதேச்சையாக சரியாக எட்டிப் பார்த்த சுந்தர், கிணற்றுக்குள் பன்றி தத்தளித்துக் கொண்டிருந்ததை கண்டார். இது சம்பந்தமாக அந்தியூர் ரேஞ்சர் உத்தரசாமிக்கு தகவல் தெரிவித்தார்‌. சம்பவ இடத்திற்கு சென்ற உத்ரசாமி, அந்தியூர் தீயணைப்பு நிலைய அலுவலருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றில் இருந்த காட்டுப்பன்றியை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட காட்டுப்பன்றி அடர்ந்த வனப் பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo