புதுச்சேரியில் அனுமதி இன்றி கண்டெய்னரில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது

by Staff / 19-04-2022 12:39:50pm
புதுச்சேரியில் அனுமதி இன்றி  கண்டெய்னரில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது

புதுச்சேரி யூனியன் காரைக்கால் அருகே உரிய அனுமதியின்றி கண்டெய்னரில்  வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.கிழக்க சாகுமேடு மீனவ கிராமத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் நேற்று இரவு கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப் பிரிவு போலீசார் இணைந்து கடற்கரை ஓரமாக அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.  கடற்கரை ஒட்டி கண்டைனர் ஒன்று இருந்தது கண்டு அங்கு சென்று பார்த்தனர் அதில் இரண்டு பெரிய கேன்களில் பெட்ரோல் நிரப்பி வைத்து அதிலிருந்து 5 10 25 லிட்டர் கேன்களில் பெட்ரோலை நிரப்பி விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக முத்தி என்பவனை கைது செய்த போலீசார் அங்கிருந்த ஆயிரம் லிட்டர் பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo