மின்சாரம் தாக்கி பதினோராம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரது மகன் கோவிந்தசாமி இவரது மகன் சந்தோஷ்குமார் என்பவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் அன்று சந்தோஷ் குமார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பந்து வீட்டில் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. அதனை எடுக்க சந்தோஷ் குமார் வீட்டின் மீது ஏறி அங்கிருந்த இரும்பு குழாய் ஐ பிடித்ததாக கூறப்படுகிறது. எதிர்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதுகுறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
Tags :