நடிகைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

'சைத்தான்' படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற நடிகை அருந்ததி நாயர் சென்னை அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவருக்கு ஏற்பட்ட விபத்து திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :