பஸ் டயரில் சிக்கி பள்ளி மாணவன் பலி
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகேயுள்ள ஈசநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நவீன்குமார், தனது அக்கா பிரியாவுடன் டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். இருவரும் திண்டுக்கல்-கரூர் சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் பயணிகளை இறக்கிவிட்டு கிளம்பியது. அப்போது பஸ்சை முந்த முயன்ற டூவீலரும், நவீன்குமார் சென்ற டூவீலரும் நேருக்கு நேர் மோதின. இதில் நிலைத்தடுமாறி பஸ் டயரில் சிக்கி நவீன் குமார் பலியானார். பிரியாவும், மற்றொரு டூவீலரில் இரண்டு பேரும் உயிர் தப்பினார். இந்த விபத்தின் பதபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Tags :