மனைவியை சிலிண்டரை போட்டு கொலைசெய்த 8 குழந்தைகளின் தந்தை கைது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தையை சேர்ந்தவர் கணேசன் (50).கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி (45). கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 5 மகன்கள் 3 மகள்கள் என 8 குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு மகன்,மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. நெல்லை தென்காசி சாலை மாறாந்தையில் 2 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
மது பழகத்திற்கு அடிமையான கணேசன் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி திரிந்துள்ளார். இதனால் முத்துலெட்சுமி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து மகன் மகள்களை வளர்த்து வந்தார். மது போதையில் அடிக்கடி மனைவியிடம் கணேசன் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் பேட்டையை சேர்ந்த கொம்பையா என்பவரிடம் ரூபாய். 30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் திரும்ப கொடுக்க வில்லை. இதனால் முத்துலெட்சுமி, கனேசன் சகோதரி சாந்தியிடம் பணம் வாங்கி கடனை அடைத்துள்ளார். குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வந்த முத்துலெட்சுமிக்கு சாந்தியிடம் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த கணேசன் என் தங்கையிடம் வாங்கி பணத்தை நீ ஏன் திரும்ப கொடுக்க வில்லை என்று கேட்டு தகராறு செய்துள்ளார். கணவன் மனைவியிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு 11 மணியளவில் முத்துலெட்சுமி இளையமகள் ராமலெட்சுமியை அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடி பால் கனிக்கு தூங்கச்சென்றார். நள்ளிரவில் மனைவியின் கதையை முடிந்து விட வேண்டும் என்ற ஆத்திரத்தில் வீட்டில் இருந்த சிலிண்டரை தூக்கிக்கொண்டு கணேசன் மாடிக்கு வந்து நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் சிலிண்டரை போட்டுள்ளார். இதில் தலை சிதறி முத்து லெட்சுமி சம்பவ இடத்தில் இறந்தார். சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் திடுக்கிட்டு எழுந்த கதறி அழத்தொடங்கினர். பின்னர் கணேசன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்தும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையுண்ட முத்து லெட்சுமியின் சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணேசனை நெல்லை பேட்டை அருகே பதுக்கியிருந்தபோது போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : மனைவியை சிலிண்டரை போட்டு கொலைசெய்த 8 குழந்தைகளின் தந்தை கைது.