நிலநடுக்கத்திற்கு நடுவே செவிலியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

by Staff / 04-04-2024 01:12:54pm
நிலநடுக்கத்திற்கு நடுவே செவிலியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

தைவானில் நேற்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு காணொளி வெளியாகியிருக்கிறது. அதில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் ஓடி வந்து, ஒரு அறையில் பிறந்த குழந்தைகள் அனைத்தையும் வைத்து பாதுகாப்பு அரணாய் நின்றனர். மருத்துவமனை சிசிடிவியில் பதிவாகி இருந்த இந்த காணொளி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகள் பலரின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo