ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 16-05-2024 03:23:35pm
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கல்வி நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. டெல்லியில் இருந்து வதோதரா செல்லும் ஏர் இந்தியா விமானம் புதன்கிழமை இரவு 7:30 மணியளவில் ஓடுபாதையில் தயாராக இருந்தது. அப்போது, ​​விமானத்தின் கழிவறையில் டிஷ்யூ பேப்பரில் வெடிகுண்டு என்று எழுதப்பட்ட எச்சரிக்கையை குழுவினர் கண்டுபிடித்தனர். உடனடியாக நடத்தப்பட்ட சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

 

Tags :

Share via

More stories