கோவில்பட்டியில் இன்று11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடங்கின.

by Editor / 16-12-2021 11:13:55pm
கோவில்பட்டியில் இன்று11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடங்கின.

தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல் வெளி மைதானத்தில் இன்று11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடங்கின, வரும் 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 30 மாநில ஹாக்கி அணிகள் விளைடுகிறார்கள்.

தொடக்க விழாவுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமை வகித்தார். போட்டியின் ஒருங்கிணைப்பு குழு துணை தலைவர், அமைச்சர் பெ.கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே.மனோகரன், 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி தலைவர் செல்லத்துரை அப்துல்லா, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

போட்டியின் தொடக்கமாக பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரனின் தந்தை சக்திவேல், தாய் மாரீஸ்வரி, தம்பி மகாராஜா ஆகியோரை கனிமொழி எம்.பி கௌரவித்தார்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர் பெ.கீதாஜீவன், ஹாக்கி இந்தியா தலைவர் ஞானேந்திர நிம்ஹோம் ஆகியோருக்கு ஹாக்கி அனைத்து மாநில அணி வீரர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஹாக்கி இந்தியா தலைவர் ஞானேந்திர நிம்ஹோம் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

போட்டியில் மொத்தம் 27 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதி போட்டியில் மோதுகின்றன. காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடக்கின்றன.
 

கோவில்பட்டியில் இன்று11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடங்கின.
 

Tags :

Share via