தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தலைமைச்செயலகத்தில் காணொளிகாட்சி வாயிலாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ. 314.89 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளங்கள், மீன் வளர்ப்புக் குளங்கள், பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடங்களையும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 54.61 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில் நுட்ப (iTNT) மையத்தையும்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ. 42.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 21 விடுதிக் கட்டடங்கள், ரூ. 16.59 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ரூ. 22.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Tags :