ஓடுபாதையில் விழுந்து நொறுங்கிய போயிங் விமானம்

by Staff / 09-05-2024 04:41:30pm
ஓடுபாதையில் விழுந்து நொறுங்கிய போயிங் விமானம்

ஆப்பிரிக்க நாடான செனகல் விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. செனகல் தலைநகர் டக்கருக்கு அருகே உள்ள முக்கிய விமான நிலையத்தில் ஓடுபாதையில் விமானம் சறுக்கி விழுந்தது. இச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. விபத்தின் போது விமானத்தில் சுமார் 73 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தாக கூறப்படுகிறது.‌ இது குறித்து வீடியோ ஒன்றும் வைரல் ஆகி வருகிறது.

 

Tags :

Share via