தமிழகம் முழுவதும் கந்து வட்டி தொடர்பாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் டிஜிபி சைலேந்திரபாபு நெல்லையில் பேட்டி

by Editor / 02-07-2022 07:41:04pm
தமிழகம் முழுவதும் கந்து வட்டி தொடர்பாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் டிஜிபி சைலேந்திரபாபு நெல்லையில் பேட்டி

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு  4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது:

கந்து வட்டி தொடர்பாக தமிழகம் முழுதும் 238 புகார்கள் பெறப்பட்டு 171 வழக்குபதிவு செய்து 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கந்து வட்டி புகார்களில் கைது செய்யப்படுவோரின் சொத்துக்கள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தென் மண்டல அளவில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்து முடக்கப் படுவது போல் இதனை  பின்பற்றி தமிழகம் முழுதும் இதே நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கஞ்சா பயிரிடும் சம்பவம் முழுக்க தடுக்கப்பட்டு அது போன்ற நிலை தற்போது இல்லை.
ஆந்திரா,ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தகவலை தொடர்ந்து ரயில்வே போலீஸ் மூலம் கஞ்சாவை மட்டும் கண்டுபிடிக்கும் வகையில் மோப்பநாய்களுக்கு சென்னை,கோவை,சேலம் ஆகிய இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் தென் மண்டல ஐஜி அஸ்ராகர்க் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார் ,நெல்லை சரக  டிஐஜி பிரவேஷ்குமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பாலாஜி சரவணன், கிருஷ்ணராஜ், சரவணன், ஹரிகிரன் பிரசாத், நெல்லை காவல் துறை துணை ஆணையாளர்கள்  ஸ்ரீனிவாசன், அனிதா, சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்   .

 

Tags : 76 people have been arrested in connection with usury across Tamil Nadu DGP Shailendrababu Nellai Interview

Share via