குப்பையில் திடீர் தீ.

by Staff / 22-03-2023 03:39:32pm
குப்பையில் திடீர் தீ.

பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனடோரியம், துடுப்பதி ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் குவிந்துள்ள குப்பைகளில் திடீரென நேற்று மதியம் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள், உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அணைக்காமல் எரியப்பட்ட பீடி அல்லது சிகரெட் போன்ற வஸ்துகளால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என, தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo