பலரையும் பாதிக்கும் மறதி நோய்!

by Editor / 12-10-2021 11:33:27am
பலரையும் பாதிக்கும் மறதி நோய்!

இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் பலருக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிய வந்திருக்கிறது . கடுமையான பணிச்சுமை மற்றும் குடும்ப சூழல் மற்றும் சமூக ஆதரவு போன்றவை இல்லாத காரணத்தால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாக தெரிய வந்திருக்கிறது .

அல்சைமர் மற்றும் டிமென்சியா என்பது நினைவாற்றல் மற்றும் பிற மனம் சார்ந்த முக்கிய செயல்பாடுகளை அழிக்கும் ஒரு முற்போக்கான நோய் ஆகும் . இது 3 வகையான மறதி நோய்களில் பொதுவான ஒன்றாக உள்ளது . இது மெதுவாகத் தொடங்கி படிப் படியாக முன்னேறி இறுதியில் மறதியை ஏற்படுத்தும் . பெரும்பாலும் நினைவாற்றல் பிரச்சினைகள் என்பது இதன் ஆரம்ப அறிகுறிகளாகும் . இதன் காரணமாக பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம் .

பழக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் வழிகளைக்கூட மறக்கலாம் , திட்டமிடுவதில் சிரமங்கள் ஏற்படலாம் மற்றும் சின்னச் சின்ன வேலைகளைக்கூட அவர்களால் செய்ய இயலாமல் போகலாம் . முடிவெடுத்தல் மற்றும் தீர்மானிப்பதிலும் பல குழப்பங்கள் ஏற்படலாம் . இந்த நோய் முற்றிய நிலையில் அறிவு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் இழக்கும் நிலை ஏற்படும் .

மறதி நோய் என்பது பொதுவாக வயதானவர்களிடம் காணப்படுகிறது . இதன் பாதிப்பு என்பது இளைஞர்களிடம் வெகு அரிதாகவே காணப்படுகிறது . அல்சைமர் , டிமென்சியாவானது காரணவியல் சுற்றுச்சூழல் மற்றும் உடல் ரீதியான காரணிகளால் ஏற்படலாம் . இது மரபணு ரீதியாகவும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது . மற்றொன்று வாஸ்குலர் டிமென்ஷியா என்று சொல்லப்படுகிறது , இது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற் படும் குறைபாட்டால் நிகழ்கிறது . மீண்டும் மீண்டும் ஒருவருக்கு பக்க வாதம் ஏற்பட்டாலோ அல்லது சில குறிப்பிட்ட இடங்களில் பக்கவாதம் ஏற்பட்டாலோ அது வாஸ்குலர் டிமென்சியா என்னும் மறதி நோயாக இருக்கலாம் .

கடுமையான மனச்சோர்வு என்பது நினைவாற்றல் , ஒருமுகப்படுத்துதல் மற்றும் அறிவுசார் திறன்களின் குறைபாடு காரணமாக ஏற்படலாம் . உடல்நலப் பிரச்னைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு இது ஏற்பட வாய்ப்பு உள்ளது . இந்த நோய்க்கான தற்போதைய சிகிச்சை முறைகள் மருந்தியல் மற்றும் மருந்தியல் சாராதவை என இருவகையிலும் உள்ளன . நடத்தை மதிப்பீட்டு அளவீடுகளிலும் சில தனிநபர்களுக்கு நன்மை பயத்துள்ளது .

மருந்துகள் அல்லாத சிகிச்சை முறைகள் ஆரம்ப கட்டங்களில் உதவும் . அதற்கு பழங்கள் மற்றும் பாதாம் உள்ளிட்ட சத்தான உணவை எடுத்துக் கொள்ளுதல் , சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைத்தல் , மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்த்தல் போன்றவற்றை செய்தால் மருந்து இல்லாமல் இதை குணப்படுத்த முடியும் .

மேலும் உற்சாகமான சூழல் மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் போன்றவையும் இதற்கான சிறந்த ஒன்றாக இருக்கும் .

 

Tags :

Share via