by Staff /
03-07-2023
04:36:19pm
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரமாக சென்னையில் தக்காளி உயர்ந்து காணப்படுகிறது. பசுமை பண்ணை கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது. அதேபோல் ரேஷன் கடைகளிலும் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என தேமுதிக சார்பில் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருந்தேன். எனது அறிக்கைக்கு செவி சாய்த்து தற்போது சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார். விஜயகாந்த் வரவேற்பு
Tags :
Share via