அங்கீகாரம் இல்லாத தொடக்க பள்ளிகள்: மூட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
அங்கீகாரம் இல்லாத தொடக்கப் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது குறித்து தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு , ‘தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டால் உடனடியாக மூட வேண்டும் என்றும் இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும் அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதோடு அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும் வெளி வந்துள்ள புகாரை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கீகாரம் இல்லாத பதவிகள் பள்ளிகள் செயல்பட்டால் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு என்று கூறப்பட்டு இருப்பதால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :