மதுரை காமராசர் பல்கலைக்கழக அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர்பேசியுள்ளாா்- நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான்
மதுரையில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசு மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டமன்றம் ஒரு சினிமா தியேட்டர் போல செயல்படுவதாகவும் மக்கள் நலம் சார்ந்த முக்கிய பிரச்சனைகளை விவாதிக்காமல் அற்பமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர் சர்க்கார் பட போஸ்டரை கிழித்தது தான் ஏதோ சர்வதேச பிரச்சனை போல சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுவதாக கிண்டல் செய்தார். அந்த போஸ்டரை மற்றும் கிளிக்காமல் இருந்திருந்தால் நீங்கள் தான் ஆட்சிக்கு வந்திருப்பீர்களோ என்று அதிமுகவை விமர்சனம் செய்ததோடு மதுரையைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கல்லூரிக்கு பல்கலைக்கழகத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை என்றும் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளதை சுட்டிக்காட்டி அவரது அறியாமையை கேலி செய்யும் வகையில் சீமான் பேசி உள்ளார்.
Tags :



















