பாய்லர் வெடித்ததில் இருவருக்கு காயம்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ஊழியர்கள் சரவணன், பன்னீர் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், ஊழியர்கள் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
Tags : பாய்லர் வெடித்ததில் இருவருக்கு காயம்